விருத்தாசலத்தில் பனை விதை நடவு

நகர்மன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ் தொடங்கி வைத்தார்

Update: 2024-09-02 12:06 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட மணலூர் மணிமுக்தாறு ஆற்றங்கரை பகுதியில், பனை விதை நடவு செய்யும் நிகழ்ச்சி திருமுதுகுன்றம் நம்பி ஆரூரான் திருமுறை ஆசிரியர் கூட்டம் சார்பில் ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமரன் தலைமையில் நடைபெற்றது. விருத்தாசலம் நகர மன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பனை விதை நடவு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் நகர மன்ற உறுப்பினர்கள்  அறிவழகி முருகன், சிங்காரவேல், ராஜாத்தி சரவணன், தீபா மாரிமுத்து, கருணாநிதி, வசந்தி புருஷோத்தமன், சுற்றுச்சூழல் சமூக ஆர்வலர் கதிர்காமன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டை கைலாய வாத்திய குழு அர்த்தஜாம சிவனடியார்கள் செய்திருந்தனர். இதில் ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யப்பட்டு வருகிறது.

Similar News