திருமயம் அருகே உள்ள காரையூர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி நேற்று இரவு மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார். ஆபத்தான நிலையில் மாணவியை மீட்ட அவரது தந்தை சின்னையா, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி மாணவி இன்று உயிரிழந்தார். இதுகுறித்து காரையூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.