ஆலங்குடியில் மாவட்ட விவசாயிகள் நல சங்கத்தின் சார்பில் காவேரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தினை விரைவாக செயல்படுத்திட வலியுறுத்தி, ஆலங்குடி வடகாடு முக்கத்திலிருந்து சந்தைப்பேட்டை வரை தண்ணீருக்காக பிச்சை எடுக்கும் நூதன போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மாவட்ட தலைவர் துரைராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.