விருத்தாசலத்தில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து நடந்தது
மத்திய பாஜக அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழ்நாடு அரசின் கல்வித் துறைக்கு நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து திராவிடர் கழக இளைஞரணி திராவிட மாணவர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட இளைஞரணி செயலாளர் பெரியார் மணி தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் செந்தில், மாவட்ட மாணவரணி செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாவட்ட இளைஞரணி தலைவர் சிலம்பரசன் வரவேற்றார். மாவட்டத் தலைவர் இளங்கோவன், மாவட்ட செயலாளர் வெற்றிச்செல்வன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். தலைமை கழக அமைப்பாளர் இளந்திரையன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் திராவிடக் கழக இளைஞர் அணி, மாணவர் கழகம், மகளிர் பாசறை மற்றும் திராவிடர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய அரசு கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முடிவில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வெங்கட ராசா நன்றி கூறினார்.