செல்போனை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் மாவட்ட எஸ் பி ஆலோசனை.
செல்போனை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் மாவட்ட எஸ் பி ஆலோசனை.
செல்போனை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் மாவட்ட எஸ் பி ஆலோசனை. கரூர் மாவட்ட பொதுமக்களிடமிருந்து கடந்த ஆறு மாதங்களில் இணையவழி குற்றங்கள் மூலம் அபகரிக்கப்பட்ட ரூபாய் 73 லட்சம் ரூபாய், களவு போன மற்றும் தொலைந்து போன அலைபேசிகள் தொடர்பாக அளித்த புகாரில் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் மீட்கப்பட்ட ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான 208 செல்போன்கள் மீட்கப்பட்டு, பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு, இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா வழங்கி அவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். செல்போன்களை பயன்படுத்தும் போதும், பாதுகாப்பாக வைத்துக் கொள்வதிலும் கவனமாக இருக்க வேண்டும் என்றும், உங்கள் செல்போனை வைத்து ஏதேனும் குற்றச்செயலில் ஈடுபட்டால் அதற்கு நீங்கள் தான் பொறுப்பு ஏற்க வேண்டிய சூழல் ஏற்படும் எனவும், தற்போது இணையதளத்தில் நல்லவையும் தீயவையும் இணையாக இருக்கிறது. இணையதளத்திலேயே நாள்தோறும் மூழ்கி உங்கள் எதிர்காலத்தை இழந்து விடக்கூடாது என்றும், ஏமாற்றும் நோக்கில் செயல்படும் தேவையில்லாத செயலிகளை பயன்படுத்துவதால் பொருள் இழப்பும், மன உளைச்சலும் ஏற்படுத்தி உங்கள் எதிர்காலத்தை நஷ்டமட செய்கிறது. எனவே செல்போன் உபயோகம் செய்யும் நபர்கள் செல்போனையும், உங்கள் மனதையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.