திருமாநிலையூரில் பட்டப் பகலில் இளைஞர் கத்தியால் குத்தி கொலை. காவல்துறை விசாரணை.
திருமாநிலையூரில் பட்டப் பகலில் இளைஞர் கத்தியால் குத்தி கொலை. காவல்துறை விசாரணை.
திருமாநிலையூரில் பட்டப் பகலில் இளைஞர் கத்தியால் குத்தி கொலை. காவல்துறை விசாரணை. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, நஞ்சை காளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி மகன் கபில்தேவ் வயது 23. இளங்கலை படித்து முடித்த கபில்தேவ் தற்போது ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இதே போல, கரூர் மாவட்டம், தாந்தோணிமலை, ராயனூர் பெட்ரோல் பங்க் எதிரே வசித்து வருபவர் பாண்டியன் மகன் வீரமலை வயது 32. இவர் பெயிண்டிங் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் உறவினர்கள். இந்நிலையில் இன்று மதியம் 12 மணி அளவில், இவர்களுக்குள் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக, கரூர் திருமா நிலையூர் ரவுண்டானா பகுதியில், ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்தனர் பின்னர் கைகலப்பாக மாறிய நிலையில், எதிர்பாராத நேரத்தில், வீரமலை தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கபில் தேவை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த கபில்தேவை, கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி மதியம் 2 மணி அளவில் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அறிந்த பசுபதிபாளையம் காவல்துறையினர் உயிரிழந்த கபில்தேவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக கொலையாளி வீர மலையை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப் பகலில் இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்த விவகாரம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.