சிறுநீரகம் பழுதானதால் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்த வாலிபர்.
சிறுநீரகம் பழுதானதால் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்த வாலிபர்.
சிறுநீரகம் பழுதானதால் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்த வாலிபர். கரூர் மாவட்டம், வெங்கமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் வயது 50. அப்பகுதியில் கூலி வேலை செய்து வந்தார். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு இவரது சிறுநீரகம் செயலிழந்ததால், என்ன செய்வது என்று தெரியாமல் விரக்தியில் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் செப்டம்பர் 2-ம் தேதி மதியம் 3 மணி அளவில், விரக்தியிலிருந்த அவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அறிந்த அவரது மனைவி ராஜலெட்சுமி வயது 45 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த சக்திவேலின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வெங்கமேடு காவல்துறையினர்.