சுகாதார வளாகத்தினை மேயர் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி சிவன் கோயில் சாலையில் அமைந்துள்ள சுகாதார வளாகத்தினை பொதுமக்கள் பயன்படுத்துமாறு மேயர் ஜெகன் பெரியசாமி கேட்டுக் கொண்டார்.
தூத்துக்குடி வடக்கு மண்டல அலுவலகத்திற்குட்பட்ட பகுதியில் மரம் நடும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், "மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள் தூய்மையானதாகவும் மாசில்லாமலும் இருப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். அதன் ஒரு பகுதியாக இன்று மாநகர மக்கள் மற்றும் பக்தர்களின் கோரிக்கையிணையடுத்து சிவன் கோயில் சாலையில் அமைந்துள்ள சுகாதார வளாகத்தினை பயன்படுத்துமாறு மேயர் கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா, மாமன்ற உறுப்பினர் சுரேஷ் குமார், மாமன்ற உறுப்பினர்கள் ரெங்கசாமி தெய்வேந்திரன் கற்பகக்கனி, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள்.