மாட்கான் - வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில்கள்- ரயில்வே பிஆர்ஓ அறிவிப்பு

மாட்கான் - வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில்கள்- ரயில்வே பிஆர்ஓ அறிவிப்பு

Update: 2024-09-06 07:53 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மாட்கான் - வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில்கள்- ரயில்வே பிஆர்ஓ அறிவிப்பு கரூர் மாவட்டம் உள்ளடக்கிய சேலம் கோட்ட ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் மரியா மைக்கேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நடைபெற உள்ள வேளாங்கண்ணி திருவிழாவைக் கருத்தில் கொண்டு பயணிகளின் கூடுதல் நெரிசலைக் கருத்தில் கொண்டு, கோவாவில் உள்ள மட்கான்- ரயில் நிலையத்திலிருந்து வேளாங்கண்ணி செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளார். இந்த ரயில், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர் வழியாக மட்கான் - வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில்களாக இயக்கப்படவுள்ளது எனவும்,   ரயில் எண்.01007 மட்கான் - வேளாங்கண்ணி சிறப்பு ரயில் மட்கானில் இருந்து 06.09.2024 அன்று மதியம் 12.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் மதியம் 12.25 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும் எனவும், ரயில் எண்.01008 வேளாங்கண்ணி - மட்கான் சிறப்பு ரயில் 07.09.24 அன்று இரவு 11-55 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு மறுநாள் இரவு 11.00 மணிக்கு மட்கானை சென்றடையும் என தெரிவித்துள்ளார். இந்த ரயில் கார்வார், கும்டா, ஹொன்னாவர், முர்தேஷ்வர், பட்கல், மூகாம்பிகா சாலை பைந்தூர், குந்தாபுரா, உடுப்பி, சூரத்கல், மங்களூர் ஜே.என், காசர்கோடு, பையனூர், கண்ணூர், தலச்சேரி, கோழிக்கோடு, திரூர், ஷோரனூர், பாலக்காடு, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி ஜங்ஷன், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனவும், சேலம் கோட்டம் தெற்கு ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலர்,மரியா மைக்கேல் தெரிவித்துள்ளார்.

Similar News