நாமக்கல் மாநகராட்சி சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்!-மாநகராட்சி ஆணையாளர் மேற்பார்வையிட்டார்
முதல் நாள் மருத்துவ முகாமில் 158 நபர்களுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டு, ஒருவரை மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டது. 213 நபர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இந்த சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம் விடுப்பட்ட வார்டுகளில் தினசரி நடைபெறும் என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.
நாமக்கல் மாநகராட்சியில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. கொண்டிசெட்டிபட்டி அருந்ததியர் தெரு, கணேசபுரம் பிள்ளையார் கோவில் தெரு, அண்ணா நகர் காலனி, எம்ஜிஆர் நகர் மற்றும் உத்தமபாளையம் ஆகிய ஐந்து இடங்களில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. உத்தமபாளையம் மற்றும் கொண்டிசெட்டிப்பட்டி பகுதியில் நடைபெற்ற மருத்துவ முகாமை நாமக்கல் மாநகராட்சி ஆணையாளர் நேரில் சென்று ஆய்வு செய்து காய்ச்சல் கண்ட நபர்களுக்கு பரிசோதனை செய்து மருந்து/மாத்திரைகள் வழங்க ஆலோசனை வழங்கினார்.மேலும் அப்பகுதியில் உள்ள வீடுகளில் கொசு புழு ஒழிப்பு பணியாளர்கள் பணிகள் மேற்கொள்வதையும் திடீர் ஆய்வு செய்தார்.கொசு புழு ஒழிப்பு பணியாளர்களிடம் வீடுகளுக்கு சென்று கொசு ஒழிப்பு பணி செய்த நாட்களை சுவற்றில் பதிவு செய்வது நன்கு தெரியும்படி எழுதுமாறு அறிவுறுத்தினார், அப்பகுதி மக்களிடம் தண்ணீர் தொட்டி மற்றும் வெளியே கட்டப்பட்ட தண்ணீர் தொட்டிகளில் நன்கு மூடி சுத்தமாக வைக்கும்படியும், வீட்டை சுற்றி கொசு புழுக்கள் உருவகாத வண்ணம் தண்ணீர் சேமித்து வைக்கவும் விழிப்புணர்வு செய்தார். மருத்துவ முகாமில் 158 நபர்களுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டு, ஒருவரை மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டது. 213 நபர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இந்த சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம் விடுப்பட்ட வார்டுகளில் தினசரி நடைபெறும் என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.இந்த மருத்துவ முகாம் மற்றும் ஆய்வு பணிகளில் மாநகர் நல அலுவலர் கஸ்தூரிபாய், துப்புரவு அலுவலர் திருமூர்த்தி, சுகாதார ஆய்வாளர் செல்வகுமார் , மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.