கள்ள தொடர்பு காரணமாக தம்பி வெட்டி படுகொலை!
தூத்துக்குடி முத்தையாபுரத்தில் செல்லப்பா என்பவரது மனைவி சக்தியுடன் அய்யன் கோவிலை சேர்ந்த வினோத் என்பவருக்கு கள்ளத் தொடர்பு இருந்த ஆத்திரத்தில் இன்று செல்லப்பா அய்யன் கோவில் தெருவிற்கு சென்று வினோத் வீட்டில் இல்லாத நிலையில் அவரது தம்பி பிரவீனை வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தூத்துக்குடி முத்தையாபுரம் அம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பா இவரது மனைவி சக்தி , செல்லப்பாவின் மனைவி சக்திக்கும் முத்தையாபுரம் அய்யன் கோவில் பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் என்ற வாலிபருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதை செல்லப்பா கண்டித்துள்ளார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி செல்லப்பா வீட்டில் இல்லாத நிலையில் அதிகாலையில் சக்தியும் வினோத்தும் வீட்டில் தனிமையில் இருந்துள்ளனர் அப்போது அங்கு வந்த செல்லப்பா வினோத்தை கண்டித்து அனுப்பியதுடன் தனது வீட்டை உடனடியாக காலி செய்துவிட்டு குடும்பத்துடன் ஏரல் அருகே உள்ள மாறமங்கலம் கிராமத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் இன்று செல்லப்பா வினோத்தை தேடி அய்யன் கோவில் தெரு பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றுள்ளார் ஆனால் வீட்டில் அவர் இல்லாத நிலையில் வீட்டில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த அவரது தம்பி பிரவீன் என்பவரை அரிவாளால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த முத்தையாபுரம் காவல் துறையினர் கொலை செய்யப்பட்ட பிரவீன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் கொலை குறித்து முத்தையாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடியில் அண்னனின் கள்ளதொடர்பு செயலால் தம்பி கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.