ஆர் ஆர் ஓட்டல் எதிரே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். ஒருவர் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு.
ஆர் ஆர் ஓட்டல் எதிரே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். ஒருவர் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு.
ஆர் ஆர் ஓட்டல் எதிரே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். ஒருவர் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு. நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர், கபிலர்மலை அருகே வெட்டுவாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி வயது 47. இவர் செப்டம்பர் 4 ஆம் தேதி இரவு 10:30 மணி அளவில், கரூர் - சேலம் பைபாஸ் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் குமாரசாமி இன்ஜினியரிங் கல்லூரி அருகே உள்ள ஆர் ஆர் ஹோட்டல் எதிரே செல்லும் போது, எதிர் திசையில், கரூர், ஜேஜே சாலை, நிர்மல் நிவாஸ் அபார்ட்மெண்ட் பகுதியைச் சேர்ந்த ராமசாமி வயது 72 என்பவர், வேகமாக ஓட்டி வந்த மற்றொரு டூவீலர், ரவி ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேராக மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வாகனத்துடன் கீழே விழுந்த ரவிக்கு தலை, இடது தோள்பட்டை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதால் உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூரிலுள்ள செந்தில் கேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த ரவியின் உறவினர் மாரப்பன் வயது 46 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை வேகமாகவும், கவனக்குறைவாகவும் ஓட்டி, விபத்து ஏற்படுத்திய ராமசாமி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.