எடப்பாடி அதன் சுற்றுவட்டார பகுதியில் நூறு இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதி
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு எடப்பாடி அருகே நைனாம்பட்டியில் உள்ள அருள்மிகு முத்து மாரியம்மன் கோவில் ஆலயத்தில் ஸ்ரீ சக்தி விநாயகர் நண்பர்கள் குழு சார்பாக சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் பூஜைகள் நடைபெற்றது.
விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது அதிலும் தமிழகத்தில் பட்டி தொட்டு எங்கும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றனர் இந்த நிலையில் சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த நைனாம்பட்டி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இன்று விநாயகர் சிலை வைத்து ஸ்ரீ சக்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் பால், மஞ்சள், தயிர், இளநீர்,கரும்புச்சாறு,பஞ்சாமிர்தம்,திருநீர்,பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் உடன் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அப்போது கற்பூர ஆரத்தி, மகா தீபாராதனை நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சியினை ஸ்ரீ சக்தி விநாயகர் நண்பர்கள் குழு சார்பாக அன்னதான ஏற்பாடு சிறப்பாக செய்திருந்தனர்.