விநாயகர் சதுர்த்தி முடிவு பெற்ற நிலையில் ராசிபுரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகரை வாகனத்தில் கரைக்கச் சென்ற பொதுமக்கள்..
விநாயகர் சதுர்த்தி முடிவு பெற்ற நிலையில் ராசிபுரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகரை வாகனத்தில் கரைக்கச் சென்ற பொதுமக்கள்..
விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் கோவில்,சாலைகள், வீடுகளில் விநாயகரை வைத்து வழிபாடு செய்த நிலையில் வழிபாடு செய்த விநாயகரை நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம் இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வெண்ணந்தூர், குருசாமி பாளையம், நாமகிரிப்பேட்டை, மங்களபுரம், திம்மநாயக்கன்பட்டி, மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்படும் விநாயகர் சிலைகள் நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஆற்றில் கரைக்கப்படுகிறது இந்த நிலையில் விபத்துகளை தடுக்கும் விதமாக ராசிபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து செல்லும்போது விபத்து ஏற்படுவதை தடுக்கும் விதமாக,தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்தி புறவழிச்சாலையாக காவல்துறையினர் அனுப்பி வருகின்றனர். மேலும் புறவழிச் சாலையில் வாகனங்களை நிறுத்திட்டு சோதனை செய்து ஓட்டுனர் உரிமம், வாகனத்தில் செல்லும் நபர்கள் குறித்து விவரம் பெற்றுக் கொண்டு 10 வாகனங்களுக்கு 2 காவலர்கள் என்பது வீதம் 200-க்கும் மேற்பட்ட வாகனங்களில் பொதுமக்கள் மேளதாளங்கள் முழங்க விநாயகரை கொண்டு சென்று வருகின்றனர். மேலும் எவ்வித அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க புறவழிச் சாலைகளில் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.