புதுகை அடுத்த போஸ்நகர் என்ற இடத்தில் இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கொண்டதில் இளைஞர் படுகாயம் அடைந்தனர். புதுகை நகரில் கடந்த சில மாதங்களாக இருசக்கர வாகனத்தில் வரும் இளைஞர்கள் அதிவேகமாக வாகனங்களை ஓட்டி செல்கின்றனர். இந்நிலையில் இரு சக்கர வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டபோது ஏற்பட்ட விபத்தில் இளைஞரின் கால் உடைந்தது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.