முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் தொடங்கி வைத்தார்.
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் தொடங்கி வைத்தார்.
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் தொடங்கி வைத்தார். கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2024-ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் தொடங்கி வைத்தார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2024 தொடங்கி வைத்த்தை தொடர்ந்து, இன்று கரூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தொடங்கி வைத்தார். செப்டம்பர் & அக்டோபர் மாதங்களில் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்கள். பொதுப்பிரிவு மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவுகளில் மாவட்ட அளவில் 27 வகையான போட்டிகளும், மண்டல அளவில் 53 வகையான போட்டிகளும் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி கரூர் மாவட்டத்தில் 10.09.24 முதல் 23.09.24 வரை பல்வேறு இடங்களில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது. கரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி அரசு ஊழியர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுப்பிரிவில் 17,574 நபர்கள் இணைய தளத்தில் பதிவு செய்துள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் 854 முதலிடம் 854 இரண்டாமிடம், 854 மூன்றாமிடம், மண்டல அளவில் 112 முதலிடம், 112 இரண்டாமிடம், 112 மூன்றாமிடம் பரிசுகள் வழங்கப்பட உள்ளது. மாவட்ட அளவிலான பரிசுத்தொகை முதலிடம் ரூ.3000. இரண்டாமிடம் ரூ.2000. மூன்றாமிடம் ரூ.1000. விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களின் வங்கிக் கணக்கில் வழங்கப்படும். மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கும் அணிகள், மாநில அளவிலான போட்டியில் பங்கேற்பார்கள். தனி விளையாட்டுப் போட்டிகளிலும் முதல் இடத்தை வென்றவர்கள், மாநில போட்டிக்கு செல்வார்கள். மாநில அளவிலான போட்டியில் முதலிடம் ரூ. 1.00.000 இரண்டாமிடம் ரூ.75,000, மூன்றாமிடம் ரூ.50,000 வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, விளையாட்டுத்துறை அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.