ஊழியர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலை முன்னாள் ஊழியர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை;

Update: 2024-09-12 09:38 GMT

அமலாக்கத்துறை அலுவலகம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா குமாரராஜப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ்ச்செல்வன், அரவிந்த் மற்றும் பிரகாஷ். இவர்கள் மூவரும் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியில் செயல்படும் தனியார் டயர் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்து வந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக வேலையில் இருந்து நின்று விட்டு ஆன்லைன் மூலம் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இவர்களின் மூன்று பேர் வங்கி கணக்கில் இருந்து சுமார் 5 கோடி ரூபாய் பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. வங்கி பண பரிவர்த்தனை குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

Advertisement


 இதனையடுத்து இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் குமாரராஜப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், அரவிந்த் மற்றும் பிரகாஷ் ஆகிய மூன்று பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தமிழ்ச்செல்வனின் உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த அருணா என்பவரின் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பள்ளிப்பட்டு பகுதியில் பரபரப்பாக காணப்படுகிறது.

Tags:    

Similar News