திருப்பத்தூரில் பால்வளத்துறை அமைச்சர் செய்தியாளர்கள் சந்திப்பு!

திருப்பத்தூரில் பால்வளத்துறை அமைச்சர் செய்தியாளர்கள் சந்திப்பு!

Update: 2024-09-12 11:38 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பத்தூர் மாவட்டம் பால்வளத் துறையின் சார்பில் குரும்பேரி பகுதியில் கால்நடை மருத்துவ முகாம் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த குரும்பேரி பகுதியில் பால்வளத்துறையின் சார்பில் கால்நடை மருத்துவ முகாம் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தலைமையில் நடைபெற்றது இந்த முகாமில் 100 க்கும் மேற்பட்ட கறவை பசு மாடுகள் பங்கேற்றன இந்த முகாமில் சிறப்பு அழைப்பாளர்களாக பால் வளதுறை அமைச்சர் மனோ தங்கராஜ் இந்த முகாமில் பங்கேற்று கறவை மாடுகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கால்நடை மருத்துவரிடம் கேட்டறிந்தார் சத்து குறைப்பாடு உள்ள கறவை மாடுகளுக்கு அளிக்கப்படும் மருந்து குறித்தும் கேட்டறிந்தார் பின்னர் விவசாயிகளிடம் கறவை மாடுகளுக்கு வழங்கப்படும் பராமரிப்பு செலவு வங்கி கடன் குறித்து பேசினார் பின்னர் வெங்களா புரம் பகுதியில் உள்ள பொது விநியோக நியாய விலை கடை யில் ஆவின் பால் உப பொருட்கள் விறப்பணை தொடங்கி வைத்தார் பின்னர் பால்வளத்துறை அமைச்சர் பேசுகையில் தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 38 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் ஆகின்றது ஒவ்வொரு விவசாயம் கரைவை மாடுகளை வைத்து குடும்ப பராமரிப்பு மற்றும் படிப்பு செலவு திருமண செலவு உள்ளிட்ட தேவைக்காக கறவை மாடுகளிடம் வருமானத்தை பெருக்கி கொள்கின்றனர் அதுமட்டுமின்றி இப்போது நடைபெற்று கொண்டிருக்கும் ஆட்சியில் விவசாயிகளின் நலன் கருதி பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தப்பட்டது பின்னர் நான் பால் வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்பு பால் விலை மீண்டும் ரூ.3 உயர்த்தப்பட்டது மீண்டும் விவசாயிகளின் நலன் கருதி பால் அடர்த்தியை கொண்டு பால் விலை உயர்த்தப்பட்டு 35 ஆக வழங்கப்பட்டு வருகிறது விவசாயிகளின் நலன் கருதி கறவை மாடுகளுக்கு பராமரிப்பு செலவு தொகையாக தொடக்க வேளாண்மைகூட்டுறவு கடன் சங்கத்தில் வழங்கப்பட்டு வருகிறது விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பேசினார் பின்னர் விவசாயிகளுக்கு கறவை மாடுகளுக்கு வங்கி கடன் மற்றும் பராமரிப்பு செலவு தொகை உள்ளிட்டவைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் திருப்பத்தூர் மாவட்டம் வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு கிராமப்புற விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கக்கூடிய கறவை மாடுகளின் பால் விநியோகம் 16 ஆயிரம் லிட்டர் கொள்முதல் செய்துவந்தது ஆனால் இன்றைய ஆட்சியின் நடவடிக்கையால் 35 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் அதிகரித்துள்ளது விவசாயிகளின் நலன் கருதி திராவிட ஆட்சியில் பால் விலை படிப்படியாக உயர்வடைந்து 3 ரூபாயிலிருந்து பாலின் அடர்த்தி தரம் குறித்து பால்விலை 10 ரூபாய் விலை ஊர்வடைந்து உள்ளது கிராமப்புற விவசாயிகளின் வாழ்வாதாரமாக கறவை மாடுகளுக்கு பராமரிப்பு செலவு தொகை வட்டி இல்லா கடன் வங்கியின் மூலம் வழங்கி வருகிறது அதுமட்டுமின்றி விவசாயிகளுக்கு மானிய விலையில் கறவை மாடுகள் வழங்கப்பட்டு வருகிறது உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை பேசினார்

Similar News