எடப்பாடி பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து பழுதானதால் பள்ளி மாணவ மாணவிகள் அவதி.

எடப்பாடி பேருந்து நிலையத்தில் (2B) வழித்தட நகர பேருந்து  பழுதானதால் மாற்று பேருந்து ஏற்பாடு செய்து கொடுக்க அடுத்தடுத்து பேருந்துகளில் பயணிகளை  ஏற்றி இறக்கி அலைக்கடித்து ஒரு மணி நேரத்திற்கு பிறகு மாற்று பேருந்து ஏற்பாடு செய்து கொடுத்ததால் மாணவ, மாணவிகளும், பயணிகளும் பெரும் அவதி...

Update: 2024-09-12 14:26 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேலம் மாவட்டம் எடப்பாடி பேருந்து நிலையத்தில் இருந்து போடிநாயக்கன்பட்டி, , புதுப்பாளையம், சமுத்திரம் வழியாக தாரமங்கலம் வழித்தடத்தில் (2B)  அரசு நகர பேருந்து மட்டுமே சென்று வருகிறது,  இந்த அரசு நகரப் பேருந்தில் பல்வேறு கிராமங்களில் இருந்து மாணவ மாணவிகள் மற்றும் பயணிகள் என ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு எடப்பாடி பேருந்து நிலையத்திலிருந்து தாரமங்கலத்திற்கு புறப்பட வேண்டிய 2 B அரசு நகர பேருந்து  திடீரென பழுதடைந்தது.. உடனடியாக அரசு போக்குவரத்து பணிமனையிலிருந்து வந்த மெக்கானிக் சரி செய்ய முயற்சித்தும் முடியவில்லை. இந்நிலையில் மாற்று பேருந்து ஏற்பாடு செய்து கொடுப்பதாக கூறியதை தொடர்ந்து அங்கே வந்த மற்றொரு பேருந்தில் பயணிகள் ஏறிய போது இந்த பேருந்து செல்லாது வேறு ஒரு மாற்று பேருந்து வரும் என்று அதிகாரிகள் கூறியதால் பயணிகளும் மாணவ மாணவிகளும் அலைக்கடைக்கப் பட்டனர்.  ஒரு மணி நேரத்திற்கு பிறகு மற்றொரு 2D எண் கொண்ட அரசு நகர பேருந்து வரவழைத்து அதில் பயணிகளும் மாணவ மாணவிகளும் ஏறி சென்றனர். மாற்று பேருந்து ஏற்பாடு செய்து கொடுக்க ஒரு மணி நேரம் தாமதமானதால் மாணவ மாணவிகளும் பயணிகளும் பெரும் அவதிக்குள்ளாகினர்.

Similar News