திருப்பூரில் வாகன விபத்துகளை குறைக்கும் வகையில் மாநகர காவல் துறையின் சார்பில் இரண்டு இடங்களில் புதிய தானியங்கி சிக்னல்!
திருப்பூரில் வாகன விபத்துகளை குறைக்கும் வகையில் மாநகர காவல் துறையின் சார்பில் இரண்டு இடங்களில் புதிய தானியங்கி சிக்னல் திறப்பு விழா!;
திருப்பூரில் வாகன விபத்துகளை குறைக்கும் வகையில் மாநகர காவல் துறையின் சார்பில் இரண்டு புதிய இடங்களில் தானியங்கி சிக்னல் திறப்பு விழா!! திருப்பூரில் நாள்தோறும் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் வண்ணம் திருப்பூர் மாநகர காவல் துறையினர் பல்வேறு விதமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர் இருந்தாலும் விபத்துக்கள் அதிகரித்து வண்ணம் இருந்த நிலையில் மாநகர காவல் துறை ஆணையர்.லட்சுமி அவர்களின் உத்தரவின் பேரில் தனியார் பங்களிப்புடன் சிக்னல்களை அமைத்து போக்குவரத்து காவல்துறையினர் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் தனியார் மருத்துவமனையின் சார்பில் தாராபுரம் சாலையில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் பல்லடம் சாலை கணபதி பாளையம் பிரிவு ஆகிய இரு சாலைகளில் புதிய தானியங்கி சிக்னல் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் மாநகர காவல் துணை ஆணையர்கள். க்ரிஷ் யாதவ், சுஜாதா ஆகியோர் திறந்து வைத்தனர்.தொடர்ந்து விபத்து இல்லா நகரமாக மாறுவதற்கு பொதுமக்கள் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் மேலும் வாகன ஓட்டிகளுக்கு காவல்துறையின் சார்பில் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல்துறை மற்றும் குற்றத் தடுப்பு பிரிவு காவலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.