திருப்பூர் மங்கலம் ரோட்டில் உள்ள குமரன் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்!

திருப்பூர் மங்கலம் ரோட்டில் உள்ள குமரன் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் ஓணம் பண்டிகையானது அத்தப்பூ கோலமிட்டு செண்ட மேளங்களுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது.;

Update: 2024-09-13 10:35 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பூர் மங்கலம் சாலையில் உள்ள திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் ஓணம் பண்டிகையானது இன்று அத்தப்பூ கோலம் செண்ட மேளங்களுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருப்பூர் மங்கலம் சாலையில் உள்ள திருப்பூர் குமரன் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் சுமார் 2500 க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் ஆண்டுதோறும் ஓணம் திருவிழாவானது வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது அந்த வகையில் நடப்பாண்டு ஓனம் திருவிழாவை முன்னிட்டு இன்று கல்லூரியில் மாணவிகள் கேரள பாரம்பரிய உடை அணிந்தும், அத்தபூ கோலம் இட்டு, ஓணம் பண்டிகையை வரவேற்று கொண்டாடினர். தொடர்ந்து மாணவிகளை உற்சாகப்படுத்தும் வகையில் கல்லூரி நிர்வாகம் சார்பில் செண்டை மேள நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமான மாணவிகள் பங்கேற்று உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர். ஆண்டுதோறும் கல்லூரியில் ஓணம் பண்டிகையானது வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருவதாகவும் தற்பொழுது ஓணம் பண்டிகை வருவதை ஒட்டி கல்லூரி நிர்வாகம் சார்பில் இன்று ஓணம் பண்டிகை கொண்டாட சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாகவும் மாணவிகள் இந்த நிகழ்ச்சியில் உற்சாகமாக பங்கேற்று ஆடிப்பாடி மகிழ்ந்தனர் என மாணவிகள் தெரிவித்தனர்.

Similar News