விருத்தாசலத்தில் விசிக மைய மாவட்ட செயற்குழு கூட்டம்

மது ஒழிப்பு மாநாடு குறித்து ஆலோசனை

Update: 2024-09-13 17:18 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மைய மாவட்டத்தின் ஒருங்கிணைந்த செயற்குழு கூட்டம் விருத்தாசலத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மைய மாவட்ட செயலாளர் நீதிவள்ளல் தலைமை தாங்கினார். கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் துணை மேயர் தாமரைச்செல்வன், மண்டல செயலாளர் ராஜ்குமார், மண்டல துணைச் செயலாளர் அய்யாயிரம், மாவட்ட பொருளாளர் மருதமுத்து , தொகுதி செயலாளர்கள் ஆலப்பாக்கம் ஜெயக்குமார், நெய்வேலி வெங்கடேசன், பாஸ்கர், பாலாஜி, குரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக நகர செயலாளர் முருகன் அனைவரையும் வரவேற்றார். மாநில செய்தி தொடர்பாளர் பாவலன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து கூட்டத்தில் வருகின்ற செப்டம்பர் 17 தந்தை பெரியார் பிறந்த நாள் அன்று விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, வடலூர் உள்ளிட்ட பகுதிகளில் விசிக சார்பில் மது ஒழிப்பு மற்றும் போதை பொருள் ஒழிப்பு பிரச்சார பயணம் மேற்கொள்வது, அக்டோபர் 2 ல் உளுந்தூர்பேட்டையில் நடைபெறும் மாநாட்டிற்கு கடலூர் மைய மாவட்டம் சார்பில் அதிக அளவில் மகளிர் அணியை அழைத்துச் செல்ல முகாம்கள் தோறும் கூட்டங்கள் நடத்தி புதிய மகளிர் உறுப்பினர் சேர்க்கை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஒன்றிய செயலாளர்கள் சுப்பு ஜோதி, கோவிந்தன், சிவசக்தி, செல்வகுமார், இளையபெருமாள், தென்றல், குறிஞ்சிப்பாடி நகர செயலாளர் வழக்கறிஞர் பாலமுருகன், அம்பேத், ராகுல், ரமனா, நகர துணை செயலாளர் வீரமணி, ராமச்சந்திரன், மகளிரணி பொறுப்பாளர்கள் கௌசல்யா, சுவிதா, தமிழ்மொழி, அபிராமி உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர பொருளாளர் தனசேகர் நன்றி கூறினார்.

Similar News