விருத்தாசலம் பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள்
எம் எல் ஏ ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்
விருத்தாசலம் அடுத்த ஆலடி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட கனிமவள நிதியின் மூலம் 2 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்டும் பணி, சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூபாய் 7.5 லட்சம் மதிப்பில் பேருந்து நிழற்குடை அமைக்கும் பணி மற்றும் அதே பகுதியில் ரூபாய் 10 லட்சம் மதிப்பில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி, மே மாத்தூர் ஊராட்சி தரிசு கிராமத்தில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 13 லட்சம் மதிப்பில் நியாய விலை கட்டிடம் கட்டும் பணி ஆகிய பணிகளுக்கு தொடக்க விழா அந்தந்த பகுதிகளில் நடந்தது. விருத்தாசலம் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பணிக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விருத்தாசலம் இப்ராஹிம், நல்லூர் சிகாமணி, பொறியாளர் சண்முகம், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆலடி பீயூலா ஜெயக்குமார், தே.கோபுரபுரம் இளையராஜா, மேமாத்தூர் ஞானவேல், ஒன்றிய கவுன்சிலர் பச்சமுத்து, காங்கிரஸ் கட்சி வட்டார தலைவர் சாந்தகுமார், சிராஜுதீன், ஒப்பந்ததாரர்கள் குழந்தைவேல், ரமேஷ், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் குணசேகர், பிரபாகரன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆசிரியர்கள் பொதுமக்கள் உடனிருந்தனர்.