கீரம்பூர் சுங்கச்சாவடியில் நாமக்கல் பதிவு எண் கொண்ட வாகனங்களுக்கு அரை கட்டணம்!-கோரிக்கை பரிசோதனையில் இருப்பதாக நாமக்கல் எம்பி மாதேஸ்வரன் தகவல்

எனது சம்பளத்திலிருந்து ஏழை எளிய நலிவுற்ற மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது இதனை அவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

Update: 2024-09-17 14:36 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் V.S. மாதேஸ்வரன் நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்து, நாடாளுமன்ற தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து விளக்கம் அளித்து பேசினார் அப்போது அவர் கூறியதாவது..‌.. நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு 85 நாட்கள் பணியாற்றியுள்ளேன். தொகுதி மக்களின் பிரச்னைகள் இதுவரை பெற்ற மனுக்கள் 260. இவற்றில் 120 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது. அதேபோல, வருகின்ற அனைத்து புகார் மனுக்கள் மீதும் குறைகளை கேட்டு அறிந்து நிறைவேற்றக்கூடிய செய்து தருவேன்.பிரதம மந்திரியின் மருத்துவ உதவி திட்டத்தின்கீழ், 55 லட்சம் ரூபாய் அளவிற்கு பயனாளிகளுக்கு மருத்துவ உதவி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 13 லட்சத்து 50 ஆயிரம் நிதி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது மீதமுள்ள நிதி விரைவில் மருத்துவ சிகிச்சைக்காக பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது.கொங்கு மண்டலத்தில் ஜவுளி தொழில் சரிவை சந்தித்து வரும் நிலையில், இத்தொழியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கை நேரில் சந்தித்து, நேரில் ஆய்வு செய்து தொழிலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டதின் அடிப்படையில் மத்திய அமைச்சரும் கொங்கு மண்டலத்திற்கு வந்து நேரில் ஆய்வு செய்ய உள்ளதாக கூறியுள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கான நிதி உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும். புதுச்சத்திரம் பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. எனது சம்பளத்திலிருந்து ஏழை எளிய நலிவுற்ற மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது இதனை அவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கடந்த மாதத்தில் கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக நாமக்கல் மாவட்ட மூன்று டேங்கர் லாரிகள், ஆற்றில் காற்றாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தனர். அவர்களுக்கான உதவித்தொகை வழங்குவதற்கு தமிழக அரசிடம் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி உரிய கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் தலா 3 லட்சம் உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட லாரி உரிமையாளர்களுக்கு உரிய நிவாரணம் பெற்றுக் கொடுக்க தமிழகம் முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களை சந்தித்து நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி விழா குடிநீர் பிரச்சினை இருக்க கூடாது என்பதற்காக இந்த பகுதிகளுக்கும், ஆய்வு செய்து குடிநீர் பிரச்சனையை தீர்வு காணப்பட்டு வருகிறது. சங்ககிரி பகுதியில் சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை சிலைக்கு ஸ்தூபி மட்டுமே உள்ளதால் அங்கு அவரது திருவுருவ சிலை அமைக்க, மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். கோவை,பெங்களூர், சென்னை விமான நிலையம் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளதால், சேலம் விமான நிலைய விரிவாக்கம் செய்ய, சேலம் விமான நிலையத்தில் ஒரு விமான மட்டுமே இயக்கப்படுவதால், 127 ஏக்கர் நிலம் கையகப்படுத்த மத்திய அரசு கூறியுள்ளதால் மாநில அரசிடம் நிலம் கையகப்படுத்திய பிறகு துரித நடவடிக்கைகளை நான் எடுத்துள்ளேன் எடுத்து வருகிறேன். நாமக்கல்- கீரம்பூர் சுங்கச்சாவடியில், நாமக்கல் பதிவு கொண்ட வாகனங்களுக்கு அரை கட்டணம் வசூலிக்க கோரிக்கை வைத்துள்ளோம் அவர்கள் அதை பரிசீலிப்பதாக கூறியுள்ளார்கள்.நாமக்கல் - சேலம் சாலையில் பெருமாள் கோவில் மேடு, புதுச்சத்திரம், கருங்கல்பாளையம் பகுதியில் வாகன விபத்து அதிகம் நடப்பதால், அப்பகுதியில் மேம்பாலம் அமைக்க கோரிக்கை மத்திய அமைச்சரிடம் கொடுத்துள்ளோம் பரிசீலிப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. கருங்கல்பாளையம் ஜங்ஷன் ஆகியுள்ளது, புதுச்சத்திரம் பெருமாள் கோவில்களோடு விரைவில் மேம்பாலம் அமைக்கப்படும்.புதிதாக அமைந்து செயல்பாட்டுக்கு வந்துள்ள, நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி- மருத்துவமனையில், நல்ல தரமான மருத்துவ வசதிகள் உள்ளன.நாமக்கல் ரயில் நிலையத்தில் எட்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் அம்ருத் திட்டத்தின் கீழ் பணிகள் விரைவு படுத்த அறிவுறுத்தி உள்ளோம்.சரக்கு வாகனங்களில் வரும் பொருள்களை இறக்கி வைக்கும் போது வெயிட்டிங் சார்ஜ் போடப்படுகிறது. சாலை மற்றும் மின்சார வசதி இல்லாததால், இறக்குமதி செய்ய காலதாமதம் ஆகிறது. எனவே மின்சாரம் வசதி உடனடியாக வழங்கப்பட்டுள்ளது. சாலை வசதி அமைக்கப்பட்டு விரைவில் 24 மணிநேரம் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிவிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.வந்தே பாரத் ரயில் நாமக்கல் ரயில் நிலையத்தில் மத்திய அமைச்சர் மற்றும் முருகன் ஆகியோரிடம் நின்று செல்வதற்கு கொண்டு வந்துள்ளனர். தூரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் போடிநாயக்கனூர் டு சென்னை செல்லும் இந்த ரயிலை நாமக்கல்லில் இன்று செல்ல அமைச்சரிடம் எடுத்துக் கூறியுள்ளோம். நாமக்கல்லில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.நாமக்கல் மாநகராட்சியில் கழிவுநீர் திட்டம், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. சுத்திகரிப்பு நிலையம் விரிவுபடுத்தப்பட்டு மத்திய மாநில அரசு திட்டங்கள் மூலம் மாசு கட்டுப்பாடு வாரியம் மூலம் மாபெரும் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தண்ணீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.நாமக்கல், திருச்செங்கோடு, சங்ககிரி பகுதியில், அனைத்து மோட்டார் போக்குவரத்து மோட்டார் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் மத்திய அரசிலும் எடுத்து கூறப்பட்டு நிரந்தர தீர்வு காணப்படும்.பரமத்தி - பிலிக்ககல்பாளையம் பாலம் ஆற்று பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அவிநாசி அத்திக்கடவு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது போல, மேட்டூர் உபரி நீரை திருமணிமுத்தாறு மூலமாக இணைத்து நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஏரி குளம் குட்டைகளின் நிரப்ப, விவசாய பெருமக்களின் வளர்ச்சிக்காக இந்த திட்டம் கொண்டு வர உறுதுணையாக இருப்பேன். மத்திய அரசு, ஊரக உள்ளாட்சித் துறை தமிழகம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும் குழு உறுப்பினர் என்ற முறையில், கிராமங்கள் பயன்பெறும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும் நாமக்கலில் செய்தியாளர்களை சந்தித்த நாமக்கல் பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் வி.எஸ் மாதேஸ்வரன் தெரிவித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது மாநில செயற்குழு உறுப்பினர் துரை, ஒருங்கிணைந்த மாவட்ட விவசாய அணி செயலாளர் ரவிசந்திரன்,பொருளாளர் மணி, மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்ராஜா, கொள்கை பரப்பு செயலாளர் கந்தசாமி, இளைஞர் அணி செயலாளர்(நாமக்கல்) பிரகதீஸ்வரன் (சேந்தமங்கலம்) ஜெகதீஸ் மாவட்ட கவுன்சிலர் அருள்மணி,ஒன்றிய செயலாளர்கள் சசிகுமார் ,கந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர.

Similar News