திருமாநிலையூரில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு வாயிற்கூட்டம் நடைபெற்றது.
திருமாநிலையூரில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு வாயிற்கூட்டம் நடைபெற்றது.
திருமாநிலையூரில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு வாயிற்கூட்டம் நடைபெற்றது. கரூர் திருமாநிலையூர் பகுதியில் செயல்படும் கும்பகோணம் கோட்ட போக்குவரத்து அலுவலகம் முன்பு, போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை உடனடியாக உருவாக்க வலியுறுத்தியும், காலம் தாழ்த்தும் தமிழக அரசை கண்டித்தும், ஏ ஐ டி யுசி கரூர் மண்டலம் சார்பில் வாயிற் கூட்டம் மண்டல துணைத் தலைவர் பூபதி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிபிஐ மாவட்ட செயலாளர் நாட்ராயன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் மாவட்ட துணை செயலாளர் மோகன் குமார், செயலாளர் முருகராஜ் மற்றும் மத்திய சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். நிகழ்ச்சியின் நிறைவில் மண்டல துணை செயலாளர் கனகராஜ் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.