தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.

Update: 2024-09-19 06:56 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
,தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்த்திடும் வகையில், கரூரில் 50-க்கும் மேற்பட்ட அலுவலகங்களின் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சங்கத்தின் வட்ட தலைவர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் அன்பழகன் சிறப்புரையாற்றினர். சங்கத்தின் நகராட்சி,மாநகராட்சி தலைவர் அறிவழகன், மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், புதிய பென்சன திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 21 மாத கால நிலுவைத் தொகை, முடக்கப்பட்ட அகவிலைப்படி, பறிக்கப்பட்ட சரண்டர் உள்ளிட்ட உரிமைகளை திரும்ப வழங்க வேண்டும். சத்துணவு மற்றும் அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர் புற நூலகர்கள், எம்ஆர்பி செவிலியர்கள் உள்ளிட்ட சிறப்பு கால முறை ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் மூன்றரை லட்சம் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம், ஓய்வூதியமும் வழங்கிட வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும். முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை அனைத்து பள்ளிகளுக்கும் விரிவு படுத்தி, சத்துணவு மையங்கள் மூலமாக சத்துணவு ஊழியர்களை கொண்டு அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News