திமுக முப்பெரும் விழாவில் இளைஞர் அணி நிர்வாகிகள்

திமுக முப்பெரும் விழாவில் இளைஞர் அணி நிர்வாகிகள்

Update: 2024-09-17 14:42 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சென்னையில் திமுக முப்பெரும் விழாவான தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கிய நாள் முதல் முப்பெரும் விழாவாகவும், தற்போது கூடுதலாக முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற்றது இவ்விழாவில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், கழக நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சென்னையில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் நாமக்கல் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அறிவுறுத்தலின் பேரில், இளைஞர் அணி சார்பில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் எம் கார்த்திக் தலைமையில் ராசிபுரம் நகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் பாண்டி மற்றும் கிஷோர், வினோத், ஒன்றிய, நகர, பேரூர் இளைஞர் அணி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Similar News