பழையபாளையம் நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் பௌர்ணமி சிறப்பு பூஜை!

புரட்டாசி மாத பௌணர்மியையொட்டி பார்வதி அம்பிகை உடனுறை நஞ்சுண்டேஸ்வரர் சுவாமிகளுக்கு பல்வேறு திரவிய பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

Update: 2024-09-18 12:38 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் அடுத்து உள்ள அலங்காநத்தம் பிரிவு ரோடு சேந்தமங்கலம் பிரதான சாலையில் அமைந்துள்ள "பழையபாளையம் கிராமம்" சின்ன ஏரி மற்றும் பெரிய ஏரி நீர் பெருகி வழிந்து ஓடும் இயற்கை எழில் மிகுந்த இடத்தில் பார்வதி அம்பிகை உடனுறை நஞ்சுண்டேஸ்வரர் ஆலயத்தில் புரட்டாசி பௌர்ணமி சிறப்பு பூஜை நடைபெற்றது. புரட்டாசி மாத பௌணர்மியையொட்டி பார்வதி அம்பிகை உடனுறை நஞ்சுண்டேஸ்வரர் சுவாமிகளுக்கு பல்வேறு திரவிய பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிவன் பாடல்களை பாடி சுவாமிகளை வழிப்பட்டனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Similar News