முறையாக பராமரிக்கப்படாத உத்திரமேரூர் பேருந்து நிலைய கழிப்பறை

Update: 2024-09-18 13:00 GMT

முறையாக பராமரிக்கப்படாத உத்திரமேரூர் பேருந்து நிலைய கழிப்பறை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

உத்தரமேரூர் பேரூராட்சி நிர்வாக சீர்கேடு!! பேருந்து நிலைய கட்டண கழிப்பறை செப்டிக் டேங்க் மேல்தள சிலாப்புகள் உடைந்து மிகவும் அபாயகரமான நிலையில் காட்சியளிக்கிறது!!




 


காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் பேருந்து நிலையத்தில் பேரூராட்சி நிர்வாகத்தினரால் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ள பேரூராட்சி கட்டணக் கழிவறையின், மேல் தள சிலாப்புகள் அனைத்தும் உடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் காட்சியளிக்கிறது!! உத்தரமேரூர் பேருந்து நிலையத்திலிருந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, மதுராந்தகம், வந்தவாசி ,செய்யாறு, உள்ளிட்ட புறநகர் பகுதிகளுக்கு செல்லும் ஆயிரக்கணக்கான மக்கள் காலை முதல் இரவு வரை எப்போதும் மக்கள் கூட்டம் அலைமோதிய நிலையில் காட்சியளிக்கும் உத்தரமேரூர் சிறிய பேருந்து நிலையத்தில் சிறப்பு நிலை பேரூராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் கட்டண கழிவறை மூலமாக தினசரி கணிசமான வருவாயினை ஈட்டி வருகிறது.

வருவாயை ஈட்டி லாப நோக்கில் செயல்படும் பேரூராட்சி நிர்வாகம் கட்டண கழிவறையினை முறையாக பராமரிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது!! கட்டண கழிவறையின் எதிரே அமைக்கப்பட்டுள்ள செப்டிக் டேங்க் மேல் தள சிலாப்புகள் உடைந்த நிலையில் காணப்படுகிறது. இத் தளத்தின் மேல் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பாதசாரிகள் நடந்து செல்கின்றனர். இது குறித்து பேருந்து நிலைய வியாபாரிகள் கூறுகையில், செப்டிக் டேங்க் சிலாப்புகள் உடைந்துள்ளதால் கடும் துர்நாற்றம் வீசுவதாகவும்!!, தரைதளத்தில் நடந்து செல்லும் பாதசாரிகளின் கால்களை உடைந்த சிலாப்புகள் பதம் பார்த்து வருகின்றன!! உயிர்ச்சேதம் நடைபெறவும் வாய்ப்பு உள்ளதாக பலமுறை பேரூராட்சி நிர்வாகத்தினருக்கு அப்பகுதி வியாபாரிகள் புகாரளித்துள்ளனர். ஆனால் செவிடன் காதில் ஊதிய சங்கு போல பேரூராட்சி நிர்வாகத்தினர் தூங்கி வழிவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பேருந்து நிலைய கட்டண கழிவறை பகுதிகளை மாவட்ட நிர்வாகத்தினர் நேரடி ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க பேருந்து நிலைய வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News