பெத்தான் கோட்டை பிரிவு அருகே டூவீலர்கள் மோதல். இருவர் படுகாயம்.
பெத்தான் கோட்டை பிரிவு அருகே டூவீலர்கள் மோதல். இருவர் படுகாயம்.
பெத்தான் கோட்டை பிரிவு அருகே டூவீலர்கள் மோதல். இருவர் படுகாயம். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி, முதலியார் தெருவை சேர்ந்தவர் காளிமுத்து வயது 67. அதே தெருவை சேர்ந்த தங்கவேல் வயது 48. இவர்கள் இருவரும் செப்டம்பர் 15ஆம் தேதி இரவு 7 மணி அளவில், அரவக்குறிச்சியில் இருந்து கரூர் செல்லும் சாலையில் அவர்களது டூவீலரில் சென்று கொண்டு இருந்தனர். இவரது வாகனம் அரவக்குறிச்சி பெத்தான் கோட்டை பிரிவு அருகே சென்றபோது, அதே சாலையில் பின்னால் வேகமாக வந்த கரூர், பசுபதிபாளையம், தெற்கு தெருவை சேர்ந்த பாக்கியராஜ் வயது 49 என்பவர் ஓட்டி வந்த டூ வீலர், காளிமுத்து ஓட்டிச் சென்ற டூவீலர் மீது பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் டூவீலருடன் கீழே விழுந்ததில் காளிமுத்து மற்றும் காளிமுத்து வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த தங்கவேல் ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக இருவரையும மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காளிமுத்துவை நாமக்கல்லில் உள்ள சிஎம் பெஸ்ட் ஹாஸ்பிடல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதேபோல தங்கவேலுவை அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து காளிமுத்து அளித்த புகாரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பாக்கியராஜ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.