இரு கூட்டுக் களவாளிகளையும் வீழ்த்தினால் மட்டுமே தமிழகம் தலை நிமிரும்

எடப்பாடி பஸ் நிலையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ் கே செல்வம் பேச்சு

Update: 2024-09-19 13:19 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
அண்ணாவின் 116 வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு  சேலம் மாவட்டம் எடப்பாடி பஸ் நிலையத்தில் செப்டம்பர் 18 இரவு 8 மணிக்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில்,அமமுக சார்பில்  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ் கே செல்வம் கலந்து கொண்டு பேசினார் அப்போது திமுக அதிமுக இரண்டு கட்சிகளுமே பண பலத்தை நம்பியே இருக்கிறது இவர்களால் எங்களைப் போன்று வாக்காளர்களுக்கு பத்து பைசா  கொடுக்காமல் தேர்தலை சந்திக்க முடியுமா என்றால் முடியாது அது அவர்களுக்கே தெரியும்  ஒரு பக்கம் திமுக சொல்வதற்கு வெட்கமாக இருக்கிறது அவங்க எல்லாம் எதுக்கு கட்சி நடத்துறாங்க என்றே தெரியவில்லை 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்  கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் ஈடுபட்டவர்களை 90 நாட்களில் சிறையில் அனைத்து கம்பி என்ன வைப்பேன் என்று கூறினாரே செய்தாரா ஏனென்றால் இருவரும் ஒன்றுதான் எடப்பாடி பழனிச்சாமியிடம் ஒரு விஷயத்தை சொன்னால் விடியரதுக்குள் ஸ்டாலினிடம் போய்விடும் அதேபோன்று ஸ்டாலினிடம் ஒரு விஷயத்தைச் சொன்னால் அது எடப்பாடி பழனிச்சாமியிடம் போய்விடும் ஆகவே இவர்கள் இருவருமே மெகா ஊழல் குற்றவாளிகள் இவர்கள் இருவருமே யார் ஆட்சிக்கு வந்தாலும் திமுக அதிமுக அந்தந்த தொகுதியில் பல்வேறு காண்ட்ராக்ட் பணி ஒதுக்கீட்டில் எம்எல்ஏக்களுக்கு 40% பங்கு உள்ளது அதேபோன்று ஜெயலலிதா இருக்கும் பொழுது அதிமுக ஆட்சியில் கொலை கொள்ளை எதுவுமே கிடையாது ஆனால் இப்போது திமுக ஆட்சியில் கொலை கொள்ளை கற்பழிப்பு கேப்பாராற்று நடைபெற்று வருகிறது போதை பொருள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது மேலும் அனைத்து துறையிலும் லஞ்சம் ஊழல் தலை விரித்து ஆடுகிறது பணம் இருந்தால் மட்டுமே எதை வேணாலும் சாதிக்கலாம் என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது எனவே இரண்டு கூட்டுக் களவாளிகள் ஒன்று சேர்ந்து உள்ளார்கள் இவர்களை வீழ்த்தினால் மட்டுமே தமிழகம் தலை நிமிரும் என பேசினார் இந்தக் கூட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் அதில் அதிகம் பெண்களே மற்றும் அமமுக நிர்வாகிகள் பல கலந்து கொண்டனர்.

Similar News