சுடுகாடு மயானத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து தர கிராம மக்கள் கோரிக்கை

Update: 2024-09-21 07:58 GMT

சுடுகாடு மயானத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து தர கிராம மக்கள் கோரிக்கை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

உத்திரமேரூர் அருகே சுடுகாடு மயானத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து தர கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




 


காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் காட்டாங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட அமராவதிபட்டினம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்து ஈமச்சடங்கு செய்வதற்காக கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு அரசு சார்பில் சுடுகாடு மயானம் ஏற்படுத்தப்பட்டு அதில் சிமெண்ட் சாலை, ஏரி மேடை, கை அடிப்பம்ப் குழாய் உள்ளிட்டவை அப்போது அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது அந்த மயானத்தில் சிமெண்ட் சாலை சேதம் அடைந்தும், முள்புதர் செடிகள் வளர்ந்தும், கை அடிப்பம்பு குழாய் பழுது ஏற்பட்டும் உள்ளது.

அதனால், கிராம மக்கள் சடலங்களை அடக்கம் செய்யும் போது பல்வேறு சிரமங்களுடன் தண்ணீர் வேறு இடங்களில் இருந்து கொண்டு வர வேண்டிய நிலைமை ஏற்பட்டு வருகிறது. மேலும், மயானத்திற்கு சுற்றுச்சுவர் முழுமையாக அமைக்கப்படாமலும் உள்ளது.

எனவே, அமராவதிபட்டினம் கிராமத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் மயானத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News