குலாலர் மகாஜன சங்க நூற்றாண்டு விழா: அமைச்சர் மா.மதிவேந்தன் பங்கேற்பு

குலாலர் மகாஜன சங்க நூற்றாண்டு விழா: அமைச்சர் மா.மதிவேந்தன் பங்கேற்பு

Update: 2024-09-23 01:29 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தமிழ்நாடு குலாலர் மகாஜன சங்கத்தின் நூற்றாண்டு விழா திருச்செங்கோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடை பெற்றது. தமிழ்நாடு குலாலர் மகாஜன சங்கத்தின் தலைவர் ராஜசேகர் விழாவிற்கு தலைமை வகித்தார். செயலாளர் குணசேகரன் வரவேற் றுப் பேசினார். இந்த நிகழ்ச்சியில் வனத் துறை அமைச்சர் மா. மதி வேந்தன் பங்கேற்று பேசியதாவது: 2,500 ஆண்டுகளுக்கு முன் சிந்து சமவெளி நாகரிகத்திலும் கீழடி நாகரிகத்திலும் பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இதன் காரண மாக குலாலர் சமுதாய மக்கள் அந்தக் காலத்திலேயே சிறந்த அறிவு டன் இருந்துள்ளனர் என்பது தெரிய வருகிறது. தொன்மையான இந்த சங்கத்தின் நூற்றாண்டு விழா கண்டிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. குலாலர் சமுதாய மக்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி பல் வேறு சலுகைகளை வழங்கி உள்ளார். அந்த வகையில் முதல் வர் மு.க. ஸ்டாலின், குயவர்கள் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கி உள்ளார். இதனை குலால சமுதாய மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். இவ் விழாவில் நகர அமைப்பு மண்டல திட்டக் குழு உறுப் பினரும் திமுக மாவட்டச் செயலாளருமான மதுரா செந்தில், திமுக தலைமைக் கழக உறுப்பினர் நடேசன், திருச்செங்கோடு ஒன்றியச் செயலாளர் வட்டூர் தங்கவேல், திமுக வழக்குரைஞர் பிரிவு அணி தலைவர் சுரேஷ்பாபு, திருச்செங்கோடு நகர்மன் றத் தலைவர் நளினி சுரேஷ் பாபு, நகர்மன்றத் துணைத் தலைவர் கார்த்திகேயன், சேலம் செல்வமாளிகை மாணிக்கம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். தமிழகம் முழுவதிலும் இருந்து குலாலர் சமுதாயத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News