மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு:

நலவாரியங்களில் ஓய்வூதியம் பெறுவதற்கு ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் வரை லஞ்சம் வாங்கும் சங்கங்களை தடை செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தீர்மானம்

Update: 2024-09-23 17:06 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
எலச்சிபாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சத்யா நகர் கிளை 2வது மாநாடு ப.கவிதா தலைமையில் நடைபெற்றது. மாநாட்டு கொடியினை ஒன்றிய குழு உறுப்பினர் பி.மாரிமுத்து ஏற்றி வைத்தார். அஞ்சலி தீர்மானத்தை டி.மாலதி வாசித்தார். எம்.பிரியா வரவேற்புரை ஆற்றினார். ஒன்றிய செயலாளர் கே.எஸ். வெங்கடாசலம் துவக்கி வைத்து பேசினார். மாதேஸ்வரன் வேலை அறிக்கை சமர்ப்பித்தார். ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஈஸ்வரன் ரமேஷ்.பாலகிருஷ்ணன் வாழ்த்தி பேசினார்கள். புதிய செயலாளராக மாதேஸ்வரன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு.சுரேஷ் நிறைவுறையாற்றினார். இறுதியாக அலமேலு நன்றி உரையாற்றினார். கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன நல வாரிய பதிவுகளில் ஓய்வூதியம் பெறும் முதியோர்களிடம் 5000 முதல் 10 ஆயிரம் வரை லஞ்சமாக வாங்கும் சங்கங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆன்லைன் பதிவு மூலம் அலைகளைக்காமல் பதிவு செய்வதை உறுதி செய்ய வேண்டும். சந்தைப்பேட்டை. சத்யாநகர் பிரிவு மெயின் ரோடு சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும். வீட்டுமனை இல்லாத குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க வேண்டும்.

Similar News