நொய்யல்- குடும்ப தகராறில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட காவலர்.

நொய்யல்- குடும்ப தகராறில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட காவலர்.

Update: 2024-09-24 11:05 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நொய்யல்- குடும்ப தகராறில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட காவலர். கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே உள்ள நொய்யல் குறுக்கு சாலை பகுதியைச் சேர்ந்தவர் அருள்குமார் வயது 46. இவர் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் அதிரடிப்படையில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி கிருத்திகா வயது 36. இவர் கரூர், மண்மங்கலம் தாலுகா அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி, சச்சின் வயது 16, அஸ்வின் வயது 9 என்ற இரு மகன்கள் உள்ளனர். கிருத்திகா தான் குடியிருக்கும் வீட்டை விரிவுபடுத்த ரூம் 30 லட்சம் கடன் வாங்கி உள்ளார். கடன் வாங்கிய விவகாரம், கணவன் மனைவியிடையே குடும்பத் தகராறு ஆக மாறியது. இந்நிலையில் செப்டம்பர் 21 ஆம் தேதி சத்தியமங்கலத்தில் இருந்து விடுப்பு எடுத்து, தனது வீட்டிற்கு வந்துள்ளார் அருள் குமார். நேற்று காலை கணவன் மனைவியிடையே மீண்டும் கடன் விவகாரம் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தி அடைந்த அருள்குமார் அவரது படுக்கை அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். இதனைக் கண்ட கிருத்திகா மற்றும் அக்கம் பக்கத்தினர் அருள் குமாரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக கிருத்திகா அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த அருள் குமாரின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவகிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்பத் தகராறில் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் சக காவலர்கள் மற்றும் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News