திருச்செங்கோட்டில் ஆதரவற்ற பெண்ணின் மகள்களை கல்லூரியில் சேர்த்த எம்எல்ஏ
திருச்செங்கோட்டில் ஆதரவற்ற பெண்ணின் மகள்களை கல்லூரியில் சேர்த்த எம்எல்ஏ
தூத்துக்குடியை சேர்ந்தவர் பொன்னுசாமி மனைவி சாந்தா (45). கணவனை இழந்த இவர் கூலி வேலை செய்து வந்தார். இரட்டை மகள்களான ராஜலட்சுமி, தனலட்சுமி ஆகியோருடன் திருச்செங்கோடு ராஜாகவுண்டம்பாளையம் வந்த னர். சாந்தா டீ விற்று இரும கள்களையும் காப்பாற்றி வந்தார். பிளஸ்2வில் நல்ல மதிப்பெண் பெற்ற ராஜலட்சுமியும், தனலட்சுமியும் மேற்கொண்டு படிக்க வச தியின்றி தவித்தனர். இதை யறிந்த திருச்செங்கோடு எம்எல்ஏ ஈஸ்வரன், இருவ ருக்கும் அர்த்தநாரீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.காம் பயில இடம் வாங்கிக் கொடுத்து, கட்டணத்தை தனது சொந்த நிதியிலிருந்து வழங்கினார். மேலும், மாணவிகளுக்கு தேவையான ஆடைகள், புத் தகங்கள், நோட்டுகள், எழுது பொருட்கள், செல்போன் ஆகியவற்றையும் அவர் வாங்கிக் கொடுத்தார். ஈஸ்வரன் எம்எல்ஏவுக்கு அவர் கள் கண்ணீருடன் நன்றி தெரிவித்தனர். அப்போது, திருச்செங்கோடு கொமதேக நகர செய லாளர் சேன்யோ குமார் உடனிருந்தார்.