வெடிபொருள் விற்பனை உரிமம் பெற ஆன்லைனில் விண்ணப்பம் வரவேற்பு

வரவேற்பு

Update: 2024-09-25 03:23 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பட்டாசு விற்பனை செய்வதற்கு, ஆன்லைன் மூலமாக தற்காலிக வெடிபொருள் விற்பனை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு விற்பனை செய்ய தற்காலிக வெடிபொருள் விற்பனை உரிமம் பெற விருப்பமுள்ளவர்கள், அரசு பொது இ-சேவை மையம் மூலமாக இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.பூர்த்தி செய்த படிவம் ஏஇ-5 விண்ணப்பம், தற்காலிக வெடிபொருள் உரிமம் கோரும் இடத்தின் அசல் வரைபடம் (புளு பிரிண்ட்), இடத்தின் உரிமையாளராக இருப்பின் பத்திர நகல், உரிமை கோரும் இடம் வாடகை கட்டடம் எனில் இடத்தின் கட்டட உரிமையாளரிடம் 20 ரூபாய் முத்திரைத்தாளில் பெறப்பட்ட அசல் வாடகை ஒப்பந்த பத்திரம், முத்திரைத்தாளில் 'நோட்டரி பப்ளிக்' மூலம் 'அபிடேவிட்', உரிமக் கட்டணமாக 600 ரூபாயை அரசு கணக்கில் செலுத்தியதற்கான ரசீது, மனுதாரரின் முகவரி ஆதாரம், நடப்பு நிதியாண்டில் வீட்டு வரி செலுத்திய ரசீது, மனுதாரரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-2 உள்ளிட்ட ஆவணங்களுடன் சேவை கட்டணமாக ரூ.500- செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். இ-சேவை மையம் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை செய்யப்படும். நேரடி விண்ணப்பங்கள் ஏற்கப்படாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News