கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவியர்கள் பேருந்துகளில் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு ஆபத்தான பயணம் செய்வதும் அதனால் மாணவ மாணவியரின் உயிருக்கும் உடல் உறுப்புக்கும் விபத்தின் மூலம் இழப்பு ஏற்படுவதை தடுத்திட மாநகரங்களில் உள்ளது போல பள்ளி கல்லூரி வேலை நாட்களில் காலை மாலை என இரு வேலைகளிலும் மாணவர்கள் சிறப்பு பேருந்துகளை பயணிகள் ஏற்றாமல் இயக்கிட வேண்டுமென கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டு அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் விழுப்புரம் அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 39 வழித்தடங்களில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதாக பொய்யான தகவல்களை அளித்துள்ளனர்.இது தவறான தகவல் ஆகும் எனவே நம் மாவட்ட மாணவர்களின் பேருந்து பயணத்தில் விபத்து ஏற்படாமல் மாணவ மாணவியரை காத்திட வேண்டும் என்று அதற்காக கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் சிறப்பு பேருந்துகளை இயக்கிய மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பலமுறை கடிதங்கள் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத மாவட்ட ஆட்சியர் அவர்களை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்த மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மக்கள் உரிமை நுகர்வோர் மைய நிறுவனர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.இதில்,கல்யாண சுந்தரம் ஜெய பிரகாஷ் குமார் மற்றும் நுகர்வோர் சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.