உப்பாற்று ஓடையில் தூர்வாரும் பணி: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு.
தூத்துக்குடி உப்பாற்று ஓடையில் தூர்வாரும் பணிகள் தொடர்பாக மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகர பகுதிகளில் கடந்த டிசம்பர் மாதம் செய்த மழை வெள்ளத்தில் குளங்களில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக வெள்ள நீர் ஊருக்குள் புகுந்து பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை வருகிற அக்டோபர் 18ஆம் தேதி துவங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாநகர பகுதிகளில் மாநகராட்சி சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பக்கிள் ஓடை தூர்வாரும் பணி துவங்கப்பட்டுள்ளது. முத்தையாபுரம், ஜெஜெ நகர், அத்திமரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கோரம்பள்ளம் குளத்திலிருந்து வரக்கூடிய வெள்ள நீர் உப்பாற்று ஓடை வழியாக கடலுக்கு செல்லும் வகையில் ஓடைப் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கோயில் பிள்ளை நகர் பகுதி பின்புறம் உப்பாற்று ஓடை செல்லும் பகுதியில் தண்ணீர் ஊருக்குள் புகார் வண்ணம் கரைகள் உயரமாக்கப்பட்டு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஓடை அளவு 300 மீட்டருக்கு மேல் உள்ள நிலையில் சில பகுதிகளில் அந்த ஓடை 100 மீட்டர் ஆக குறைந்துள்ளது. இந்த பகுதியை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மேயர் ஜெகன் கூறுகையில் "பக்கிள் ஓடையை கடல் பகுதியில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளான 52, 53, 56வது வார்டு பகுதிகளில் கோரம்பள்ளம் குளத்தில் இருந்து வெளியேற்றப்படும் மழை நீர் தேங்காத வகையில் ஓடைப்பகுதிகள் அகலப்படுத்தும் பணிக்காக ஆய்வு மேற்கொண்டோம். இந்த பகுதிகளில் தண்ணீர் உள்ளே செல்லாத அளவு கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கடலில் எளிதாக மலை உள்ளநீர் கலக்கும் வகையில் முகத்துவாரப் பகுதி வரை 300 மீட்டர் முதல் 600 மீட்டர் வரை கடலுக்குள் செல்லும் வகையில் அகலப்படுத்த உள்ளது. இதேபோன்று தூத்துக்குடி மாநகர பகுதியில் 10 இடங்களில் மழை நீர் முறையாக கடலில் கலக்கும் வகையில் வழித்தடங்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவலை மழைக்கு முன்பாக பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் இந்த பணிகளை மாநகராட்சி நிர்வாகம் துரிதப்படுத்தி செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார். ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மண்டல தலைவர் பாலகுருசாமி, வட்ட செயலாளர் பிரசாந்த், மாமன்ற உறுப்பினர்கள் விஜயகுமார், முத்துவேல், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் சென்றனர்.