சாம்சங் போராட்டக்காரர்களுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்ததை ஆதரவு

Update: 2024-09-28 07:44 GMT

சாம்சங் போராட்டக்காரர்களுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்ததை ஆதரவு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

அரசியல் கட்சி பிரமுகர்கள் யாரும் சாம்சங் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாக போராட்ட பந்தலுக்கு வர வேண்டாம் ; சி.ஐ.டி.யு., மாநில தலைவர் முத்துக்குமார் பேசிய நிலையில் ஆதரவு அளிக்க வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ., செல்வப்பெருந்தகை.




 


 


காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை தொழிலாளர்கள் ஊதிய உயர்வு தொழிற்சங்கம் அங்கீகாரம் போனஸ் எட்டு மணி நேரம் பணி உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொழிலாளர்களின் தொடர் போராட்டம் இன்று 17 வது எட்டி உள்ளது. இன்று நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சி.ஐ.டி.யு., மாநில செயலாளர் முத்துக்குமார் அரசியல் கட்சித் தலைவர்கள் யாரும் தாங்கள் ஆதரவளிப்பதாக கூறி சாம்சங் போராட்ட பந்தலுக்கு வர வேண்டாம். நாங்கள் யாரும் யாருடைய அரசியலுக்கும் விரும்பவில்லை. தொழிலாளர்களின் போராட்டத்தை ஆதரித்து அரசிடம் நிர்பந்தம் செய்யுங்கள், அறிக்கை வெளியிடுங்கள் அதுவே எங்களுக்கு போதுமானது என குறிப்பிட்டு தொழிலாளர்கள் மத்தியில் பேசினர். இவர் பேசிய ஒரு மணி நேரத்தில் ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான செல்வப்பெருந்தகை சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வந்தார். அப்போது அங்கிருந்த தொழிலாளர்கள் மற்றும் சிஐடியு உறுப்பினர்கள் செல்வப் பெருந்தகைக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தனர். போராடி வரும் தொழிலாளர்கள் மத்தியில் இதுவும் கருத்துக்களை பகிர வேண்டாம் என என அறிவுறுத்தி அனுப்பினர்.

இதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசிய மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை. ;

சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் அரசியலுக்கு அப்பாற்பட்டு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை சந்தித்துள்ளேன். தொழிலாளர்களின் உரிமையை மீட்டு தர முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, இவர்களின் கோரிக்கை குறித்து பேசி நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம்,. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிவரும் தொழிலாளர்களை ஆலை நிர்வாகம் பணிவோடு கையாள வேண்டும். ஜனநாயக நாட்டில் போராடுவது , அது அவரவர்களின் உரிமை, இந்த போராட்டம் நீண்ட நாள், நீடித்து வரும் நிலையில் குடும்பத்தில் பிரச்சனை இல்லாமலும், ஆலைகளுக்கும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இந்தப் போராட்டத்தை கையாள வேண்டும் என நோக்கில் தொழிலாளர்களை சந்தித்ததாக கூறினார்.

Tags:    

Similar News