புதிய தார் சாலை அமைக்க எம்எல்ஏ பூமி பூஜை
சங்ககிரி: புதிய தார் சாலை அமைக்க சங்ககிரி சட்டமன்ற எம்எல்ஏ சுந்தரராஜன் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைப்பு....
சேலம் மாவட்டம் சங்ககிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கத்தேரி ஊராட்சி பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.30 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சடையம்பாளையம் முதல் சாமியாம்பாளையம் வரை புதிய இணைப்பு தார் சாலை அமைக்கும் பணிகளுக்காக சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் சுந்தரராஜன் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி சிறப்பித்தார். அப்போது சேலம் புறநகர் மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் ஏ.பி. சிவகுமாரன், வார்டு உறுப்பினர்கள், அதிமுக ஒன்றிய, நகர பேரூர் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் இதில் கலந்துகொண்டனர்.