முன்கள பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் தமிழ்நாடு டெங்கு பசுப்பு ஒழிப்பு முன்கல பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Update: 2024-09-29 12:56 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் முன்பு மணிக்கூண்டு பகுதியில் தமிழ்நாடு பணியாளர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் ராஜகோபால் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மருத்துவ துறை பணியாளர் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் சாந்தி, கௌரவ தலைவர் ரவீந்திரநாத் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். திண்டுக்கல், ஈரோடு, மதுரை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் சில பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களை எந்த ஒரு நிபந்தனையின்றி பணி வழங்க வேண்டும். திண்டுக்கல் பாளையம் பேரூராட்சியில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஐந்து பணியாளருக்கு உடனே பணி வழங்க வேண்டும். பொசுப்புழு ஒழிப்பு பணியாளருக்கு எதிராக செயல்படும் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும் மற்றும் பெண் ஊழியர்களை இழிவுபடுத்தும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் தினக்கூலி முறையை கைவிட்டு மாத ஊதியம் வழங்க வேண்டும். உயர் அதிகாரிகள், உள்ளூர் பிரமுகர்கள், கவுன்சிலர்கள் போன்றவர்களின் வீட்டு வேலைகள் தோட்ட வேலைகள், சமையல் வேலைகள் ஆகிய பணிகளில் களப்பணியாளர்களை ஈடுபடுக்கக்கூடாது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தற்போது தமிழகத்தில் 40 ஆயிரம் பேருக்கு டெங்கு காய்ச்சல் பரவி உள்ளது இந்நிலையில் டெங்கு கொசு ஒழிப்பு பணிக்கு ஆட்கள் அதிகமாக தேவைப்படுகிறார்கள். ஆனால் தற்போது பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகியவற்றில் பணியாளர்களை பணி நீக்கம் செய்யப்பட்டு வருவதை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோரிக்கைகள் நிறைவேற்றாத பட்சத்தில் மாநில அளவில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்த இருப்பதாகவும் கோட்டை நோக்கி பேரணியாக திரண்டு போராட்டம் நடத்த இருப்பதாகவும் தெரிவித்தனர். மாநிலம் முழுவதிலிருந்தும் பெண் பணியாளர்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகள் குறித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Similar News