எடப்பாடியில் நந்தி பகவானுக்கு தேய்பிறை சோமவார பிரதோஷம்

எடப்பாடியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு தேவகிரி அம்மன் உடனமர் பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் ஆலயத்தில் நந்தி பகவானுக்கு தேய்பிறை சோமவார பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.

Update: 2024-09-30 16:01 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சோமன் என்றால் சிவன், சோமவாரம் திங்கட்கிழமை, சிவனுக்கு உகந்த திங்கட்கிழமை பிரதோஷமாகம் சிவஆலயங்களில் சோமவார பிரதோஷம் சிறப்பு வாய்ந்தது. அதனைத் தொடர்ந்து இன்று மாலை சேலம் மாவட்டம் எடப்பாடி பஸ் நிலையம் பின்புறம் அமைந்துள்ள சிறப்பு வாய்ந்த அருள்மிகு தேவகிரி அம்மன் உடனமர் ஸ்ரீ நஞ்சுண்டேஸ்வரர் ஆலயத்தில் சோமவாரப்பிரதோஷம் சிறப்பாக நடைபெற்றது. அதற்கு முன்னதாக நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் நெய்வேத்தியம் ஏற்றி பூஜைகள் நடைபெற்றது. பின்னர் நந்தி பகவான் மீது அருள்மிகு தேவகிரி அம்மன் உடனமர் பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் சுவாமி அமர்ந்து திருக்கோவிலை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Similar News