போலீசாருடன் கைகோர்த்து இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட இளைஞர்கள்
குமாரபாளையம் போலீசாருடன் கைகோர்த்து இளைஞர்கள் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.;
குமாரபாளையம் போலீசார் சார்பில் மொபைல் ஆடியோ மூலம் பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இது பற்றி குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி கூறியதாவது: குமாரபாளையம், மற்றும் சுற்றியுள்ள தட்டான்குட்டை, குப்பாண்டபாளையம், சானார்பாளையம், எம்/ஜி.அற. நகர், பூலக்காடு உள்ளிட்ட பகுதிகளில் சந்தேகபடும் படியான மூன்று நபர்கள் இரவில் சுற்றி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே, பொதுமக்கள் இரவில் யாராவது கதவை தட்டினால் திறக்க வேண்டாம், போலீசாருக்கு உடனே தகவல் தெரியப்படுத்துங்கள். நகரின் பாதுகாப்பிற்கு இரவு ரோந்து பணிக்கு வர விருப்பம் உள்ள இளைஞர்கள் என்னை தொடர்பு கொள்ளுங்கள்., போலீசாருடன் நீங்களும் சேர்ந்து நகரின் நன்மைக்கு உதவுங்கள். எனது மொபைல் நெம்பர். 94981 78425. இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். \ இதனை கேட்ட இளைஞர்கள் குமாரபாளையம் போலீசாருடன் இரவு நேர ரோந்து பணியில் பெருமளவில் ஈடுபட்டு வருகின்றனர். போலீஸ் ஸ்டேஷன்களில் போதுமான போலீசார் இல்லை என இருப்பதை விட, இது போல் மற்ற போலீஸ் ஸ்டேஷன்களில் உள்ள அதிகாரிகள் செயல்படலாம் அல்லவா? என பொதுநல ஆர்வலர்கள் கூறினர்.