வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்த பாரம்பரிய உணவுத் திருவிழா

Update: 2024-10-01 06:24 GMT

வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்த பாரம்பரிய உணவுத் திருவிழா

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் இன்று 30. 9 .2024 பாரம்பரிய ஊட்டச்சத்து உணவுகளை நினைவு கூறும் வகையில் இன்றைய தலைமுறைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற




 


இந்தஉணவு திருவிழாவில் பாரம்பரிய உணவுகளான சோளம், கம்பு, கேள்வரகு, தினை உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்து மிக்க பொருட்களால் ஆன அடை, தோசை, இட்லி, பக்கோடா, மற்றும் பல்வேறு உணவுகள்,மற்றும் கொண்டைகடலை நிலக்கடலை, உளுந்து,பச்சைப் பயறு உள்ளிட்ட ஏனைய பொருட்களில் தயாரித்த பல்வேறு திண்பண்டங்களை காட்சிப்படுத்தி ஊட்டச்சத்து உணவு திருவிழா நடைபெற்றது.

இந்த இவ்விழாவில் யாம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தோம்.

நிகழ்ச்சியில் காட்டாங்குளத்தூர் ஒன்றிய பெருந்தலைவர் உதயா கருணாகரன், துணைத் தலைவர் ஏ.வி.எம். இளங்கோவன்,ஒன்றிய கவுன்சிலர்கள்,வார்டு உறுப்பினர்கள், மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஊட்டச்சத்து திருவிழாவில் காட்சிப்படுத்தப்பட்ட உணவுகளை சமைத்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News