நகராட்சியுடன் பஞ்சாயத்து கிராமத்தை இணைக்கும் பொது மக்கள் எதிர்ப்பு
பள்ளிபாளையம் நகராட்சியுடன் சமய சங்கிலி கிராமத்தை இணைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு
பள்ளிபாளையம் ஒன்றியத்தில் சமய சங்கிலி ஊராட்சி பகுதி அமைந்துள்ளது.இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.சமய சங்கிலி கிராமத்தை பள்ளிபாளையம் நகராட்சியுடன் இணைக்கும் பணி நடைபெறுவதாகவும், அப்படி சமய சங்கிலி பஞ்சாயத்து பகுதியை பள்ளிபாளையம் நகராட்சியுடன் இணைக்கும் பட்சத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். விவசாய நிலங்கள் எல்லாம் விலை நிலங்களாக மாறிவிடும். தொழிற்சாலைகள் ஊருக்குள் வரும். மேலும் 100 நாள் வேலை திட்டத்தில் சுமார் 1200 பேர் பதிவு செய்து நிலையில், அதில் 700 நபர்கள் பயனடைந்து வருகிறார்கள்.வீட்டு வரி, குடிநீர் வரி உள்ளிட்ட அனைத்து விதமான வரிகளும் அதிகரிக்கும். இப்படி நகராட்சியோடு இணைக்கும் பொழுது ஏராளமான பாதிப்புகளை சந்திக்க வேண்டி இருப்பதால், பள்ளிபாளையம் நகராட்சியுடன் சமய சங்கிலி கிராமத்தை இணைக்கும் முடிவினை தமிழக அரசு கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி, சமயசங்கிலி கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் புதன்கிழமையன்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர் . இதனை அடுத்து ஊராட்சி ஒன்றிய செயல் அலுவலர் கிரிஜா அவர்களிடம் ஊர் பொதுமக்கள் கோரிக்கை மனு வழங்கினர் . மனுவை பெற்றுக் கொண்ட அலுவலர் கிரிஜா மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார் .இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தின் காரணமாக பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது..