கரூரில் அம்பேத்கரின் கனவை நிறைவேற்ற புதிய பொறுப்பாளர்கள் நியமனம்- மாநில செயலாளர் கருப்பையா பேட்டி.
கரூரில் அம்பேத்கரின் கனவை நிறைவேற்ற புதிய பொறுப்பாளர்கள் நியமனம்- மாநில செயலாளர் கருப்பையா பேட்டி.
கரூரில் அம்பேத்கரின் கனவை நிறைவேற்ற புதிய பொறுப்பாளர்கள் நியமனம்- மாநில செயலாளர் கருப்பையா பேட்டி. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் கூட்டரங்கில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கட்சியின் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் அன்பழகன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மதுரை வீரன், பாராளுமன்ற பொறுப்பாளர் ரவி, மாநில செயலாளர் கருப்பையா, மாநிலத் துணைத் தலைவர் இளமான் சேகர் உள்ளிட்ட மாநில,மாவட்ட அளவிலான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கட்சியை வலுப்படுத்துவதற்காக புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது இதன் அடிப்படையில் மாவட்ட செயலாளர் அன்பழகன் மாவட்ட தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதேபோல மாவட்ட அளவில் பல்வேறு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்த மாநில செயலாளர் கருப்பையா, பகுஜன் சமாஜ் கட்சியை தமிழகத்தில் பலப்படுத்தவும், அண்ணல் அம்பேத்கரின் கனவையும், லட்சியத்தையும் நிறைவேற்றுவதற்காகவும், தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சி அரசியல் அதிகாரத்தை பெறுவதற்காகவும் கட்சியில் பாராளுமன்ற, மாநில, மாவட்ட, தொகுதி்க்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.