நெல்லையில் கடந்த 12,13 ஆகிய தினங்களில் பரவலாக மழை பெய்தது. இந்த மழையினால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இந்த நிலையில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் நேற்று (டிசம்பர் 21) வரை வடகிழக்கு பருவமழை காலத்தில் இந்தியாவிலேயே மிக அதிகமான மழையாக நெல்லை மாவட்டம் மாஞ்சோலை ஊத்து பகுதியில் பெய்துள்ளது. இதுவரை 2113 மில்லி மீட்டர் மழை பதிவாகி இந்த இடத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.