சுசீந்திரம் தாணுமாலயா சுவாமி கோவில் விழா தற்காலிக கடைகள் ஏல கூட்டம்
கன்னியாகுமரி
குமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் வருடம் தோறும் மார்கழிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதுபோல இந்த ஆண்டு திருவிழா வருகின்ற 4ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. திருவிழா காலங்களில் வரும் பக்தர்கள் வசதிக்காக 10 நாட்கள் தற்காலிகமாக கடைகள் அமைத்து வியாபாரம் செய்வதற்காக சுசீந்திரம் பேரூராட்சி சார்பில் பொது ஏலம் விடப்படும். அதற்காக நேற்று (21-ம் தேதி) சுசிந்திரம் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் அனுசுயா தலைமையில் செயல் அலுவலர் கமலேஸ்வரி முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் இந்த ஆண்டு தற்காலிக கடைகள் அமைத்து வியாபாரம் செய்வதற்கான ஏலத்தை பேரூராட்சி நிர்வாகமே எடுத்து நடத்தலாம் என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றியதால், இந்த ஆண்டு ஏலம் பேரூராட்சி எடுத்துள்ளது. எனவே தற்காலிக கடைகள் அமைத்து வியாபாரம் செய்பவர்கள் கடைகள் தேவைப்பட்டால் சுசீந்திரம் பேரூராட்சி அலுவலகத்தை தொடர்பு கொள்ளும்படி சுசீந்திரம் பேரூராட்சி செயல் அலுவலர் கமலேஸ்வரி தெரிவித்தார்.