ராசிபுரம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் மகாத்மா காந்தி பிறந்தநாள் கொண்டாட்டம்
ராசிபுரம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் மகாத்மா காந்தி பிறந்தநாள் கொண்டாட்டம்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது . நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ராசிபுரம் நகர காங்கிரஸ் சார்பில் நகர தலைவர் ஸ்ரீ ராமலுமுரளி தலைமையில் ராசிபுரம் காந்தி மாளிகை முன்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இராசிபுரம் காவல் உதவி ஆய்வாளர் ரகுபதி முன்னாள் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் பாச்சல் சீனிவாசன், மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் சண்முகம், நகர பொருளாளர் மாணிக்கம், கோவிந்தராஜ், நகர செயலாளர் வட்டாரத் தலைவர் கணேசன், பிரகதீஸ் பதி, பழனிசாமி, மதுரைவீரன், ராமலிங்கம், முத்துசாமி, ஜெயபால் ,பிரகாசம், மூர்த்தி, ரங்கநாயகி, சுப்ரமணி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.